Monday 4 March 2013

உரையாடல்கள் - II


நேற்று மாலை வெகு வேளைக் காத்திருந்தேன் 
என்னிடம் விடை பெற்றுச் செல்வாய் என்று....

விடை பெறலாம் என்றே உத்தேசித்தேன் 
ஆனால் என் பின்னாலே வந்து விடுவீரோ 
என்ற ஐயம் தான் என்னைத் தடுத்து விட்டது ...

உன் பின்னால் ஏன் வரப் போகின்றேன் 
உன்னுடன் அல்லவா நடந்து வருவேன்...

ஓ அதற்கு ஐயப்படக் கூடாதா...
எவரேனும் பார்த்தால் தெரியும்...

யார் பார்த்தால் என்ன உன் வழித் துணையாக 
வரக் கூடவா உரிமையற்றுப் போய்விட்டேன்...

தங்களிடம் வாதிட்டு என்னால் 
வெல்ல இயலாது .

உரையாடல்கள் - I


அன்பரே விழியை பார்ப்பது 
அதனோடு உரையாடவா 
இல்லை வீழ்த்திடவா...

ஏன் தோழி...?

கர்வம் கொண்ட விழிகள் 
உம பார்வை தீண்டியதும் 
வீழ்ந்து போகின்றனவே 
மண் நோக்கி...

அதில் தானே 
பிரமித்து போகின்றேன் நான்...
உன் பார்வை வரம் கிடைக்க 
வழி ஏதும் தெரியாமல்...!

Thursday 10 January 2013

விடையறியாமல்


ஆற்றங்கரை மலர்வெளியில்
மலர் கொய்ய வந்தவள் 
ஏன் என் மனம் கொய்து சென்றாள்??

என் பார்வைகள் எல்லாம் 
அவள் பிம்பமாய் தோன்றிட 
மாயம் என்ன செய்தாள்??

வாய் மொழி பேசாது 
விழி மொழி பேசாது 
எவ்வாறு என்னை மௌனமாக்கினாள்??

பாடசாலை நடத்தாமல் 
ஏடுகள் கற்றுக் கொடுக்காமல் 
எப்படி என்னை கவியாய் மாற்றினாள்??


ஓவியம்


மொழிகள் வடிவமைக்காமல் 
நிறங்கள் வடிவமைக்கும் 
அழகான கவிதை...!

ஓவியம்